படம் என்ற பெயரில் நடிகைகளை வைத்து பணம் சம்பாதிக்கும் பிரபல இயக்குநர்.. வைரலாகும் புகைப்படம்

Report
483Shares

கொரானா காலத்தில் சினிமாவே முடங்கிருக்கும் சூழலில் சில படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கமாகிவிட்டது. அதேசமயன் வெப்சீரிஸ் படங்களும் அதுவும் முகம் சுழிக்க வைக்கும் படங்கள் வெளியாக அதிர்ச்சியளித்தும் வருகிறது.

இந்நிலையில் யாரெல்லாம் செல்வ செழிப்பாக இருந்தார்களோ தெரியாது, ஆனால் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் காட்டில் அடைமழை தான்.

ஆர்ஜிவி என்ற OTT தளத்தை ஆரம்பித்து அதில் அந்தமாதிரி படங்களை விட மோசமான படங்களை வெளியிட்டு கல்லா கட்டினார்.

ராம்கோபால் வர்மா இயக்கி வெளியிட்ட குறும்படங்கள் அனைத்துமே அவருடைய சொந்த OTT தளமான ஆர்ஜிவி தளத்தில் PPV என்ற முறையில் ஒரு முறை பார்ப்பதற்கு 200 ரூபாய் கட்டணம் வைத்து வெளியிடப்பட்டது.

அவர் எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமாக வசூல் செய்தது அந்த படங்கள். கிளைமாக்ஸ், நேக்கிடு, திரில்லர் போன்ற படங்கள் அனைத்துமே பல கோடி வசூல் செய்தது.

திரில்லர் அம்சங்களாக உருவாகும் இவரது படங்களில் பெரும்பாலும் நடிகைகளை படு கவர்ச்சியாக நடிக்க வைத்து இளசுகளின் சூட்டை கிளப்புவதே அவருக்கு வேலை.

இந்நிலையில் அடுத்ததாக இரண்டு நடிகைகளை வைத்து லெசிபியன் திரில்லர் என்ற முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளாராம். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படி படம் என்ற பெயரில் இப்படியான நடிகைகளை நடிக்க வைத்திருப்பது ரசிகர்களிடையெ அதிர்ச்சியை ஏற்படுத்தி வைத்துள்ளது. சமீபத்தில் இரண்டாம் குத்து படத்தின் டீசர் சர்ச்சையாக அமைந்து வருகிறது.