அந்தகட்சி தான் சூப்பர் இது டம்பி! ஒரே நாளில் கட்சி மாறிய நடிகை குஷ்பு.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

Report
7Shares

பல ஆண்டுகளாக சினிமா தவிர்த்து அரசியல் இருப்பவர் நடிகை குஷ்பு சுந்தர். பிரபல கட்சியான காங்கிரஸில் இருந்து விலகி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் போட்டுவிட்டு தற்போது டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்துள்ளார்.

மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு, நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் இதை செய்தேன். மேலும் ஆரம்பம் முதலே பாஜகவின் திட்டங்கள் பல எனக்கு பிடித்திருந்தன. ஆனால் காங்கிரஸில் இருப்பதாலேயே அவற்றை எதிர்த்தேன் என்று பாஜகவில் இணைந்ததை உறுதிப்படுத்தி பேட்டியும் கொடுத்துள்ளார்.

நடிகை குஷ்புவின் இந்த செயல் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் சில மீம்ஸ்களை இணையத்தில் க்ரியேட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.