பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு வானொலி நிறுவனம் செய்த துரோகம்? வேலையை தூக்கி எறிந்த நிலை..

Report
696Shares

இன்று தமிழ் சினிமாவை கலக்கும் பலர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி பின் பிரபலமானவர்கள் தான். அந்தவரிசையில் மிகப்பெரிய இடத்தில் செல்லாவிட்டாலும் தன்னுடைய காமெடி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதல் ஒன்வேர்ட் காமெடி என இதன் மூலம் அனைவரையும் கவர்ந்து பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் மகாபா ஆனந்த்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியில் உள்ள தொகுப்பாளர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதை மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறார் மா கா பா ஆன்ந்த்.

இந்நிலையில் ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியா பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றிய சமயத்தில் தான் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றினார்.

தொலைக்காட்சியில் பணியாற்றி கொண்டிருந்த நேரத்தில் வானொலி நிறுவனம் அதிக சம்பளம் தருகிறோம், எங்களிடம் மட்டும் தான் பணியாற்ற வேண்டும், தொலைக்காட்சியில் பணியாற்ற முடியாது என கூறி வந்து விடுங்கள் என்று கூறி வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் வேலையும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம் என்று அங்கிருந்து வெளியே வந்துவிட்டாராம் மா கா பா ஆனந்த். தற்போது பிரபல தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்கள் வரிசையில் இவரும் தற்போது இருந்து வருகிறார்.