பத்திரிக்கையாளர் சந்திப்பில் சைலன்ஸ் என விஜய் ஏன் கத்தினார் தெரியுமா? உண்மையில் இதுதான் காரணமாம்!

Report
54Shares

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது இவர் படமான மாஸ்டர் படம் கொரானாவால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் தள்ளிச்சென்று வருகிறது.

இதையடுத்து படம் எப்படி வெளியிடலாம் என்றும் படக்குழு முடிவெடுத்து வருகிறது. விஜய் படங்கள் என்றாலே விழாக்கள் அதிகளவில் காணப்படும். அப்போது ரசிகர்களின் எனர்ஜிக்கு ஏற்றவகையில் தான் பேசி வருகிறார்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தோல்விகளை கொடுத்த படங்களால் விஜய் கொஞ்சம் மனகஷ்டப்பட்டு கோபப்பட்டதும் நேரிட்டது. அந்தவகையில் வில்லு படத்தின் தோல்விக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருந்தார் விஜய் மற்றும் அப்படத்தின் இயக்குநர் பிரபு தேவா.

அப்போது விஜய் கோபத்தில் ஏய்.. பேசிட்டு இருக்க! சைலன்ஸ் என்று தன்னை அறியாமலே கத்தியுள்ளார். இதை பெரிதாக்கிய விஜய்யின் எதிர்ப்பாளர்கள் அவரை விமர்சித்து பத்திரிக்கையாளர்களைத் தான் அப்படி கூறினார் என்று கூறி இன்று வரை விஜய்யை கலாய்த்து வந்தனர்.

ஆனால் உண்மையில் அது கிடையாதாம். நடிகர் விஜய் பத்திரிக்கையாளர்களிடம் நல்ல ஒரு மரியாதையை வைத்துள்ளவர். அப்போது வெளியில் சலசலப்புடன் இருந்ததால் பேசமுடியாமல் தொந்தரவாக இருந்ததால் வெளியில் இருப்பவர்களை தான் அப்படி கோபத்தில் கத்தியுள்ளார்.

இதையடுத்து அப்படி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் விஜய்.