இதை நயன்தாரா திரிஷாவிடம் போய் கேளுங்க?. தயாரிப்பாளர்களை மிரட்டிய பிரபல நடிகை

Report
73Shares

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றியை கண்டு பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இதையடுத்து கோவில், 7ஜி ரெய்ன்போ காலனி, புதுபேட்டை போன்ற வெற்றிப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

2006 இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளே நீடித்த திருமண வாழ்க்கை 2010ல் இருவரும் சமரசமாக கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கியமான காரணமாக சோனியா அகர்வாலுக்கு இருந்த குடிப்பழக்கம் தான் என்று பல சர்ச்சைகளும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த சோனியா அகர்வால் வானம் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது லாக்டவுன் என்பதால் இணையத்தளத்திற்கு பேட்டியளித்தும் சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கும் நயன் தாரா திரிஷாவிற்கும் கிட்ட 35 வயதில் இருக்கிறோம். ஆனால் என்னை மட்டும் அம்மா, அண்ணி கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்க உங்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை கேட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் என்னிடம் கேட்ட இந்த கேள்வியை திரிஷா இல்லைனா நயன்தாரா அவர்களிடம் போய் கேட்க வேண்டியதானே.

நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் வயதானவள் போன்று இருந்தாலோ அல்லது உடல்கட்டு இல்லாமல் இருந்தாலும் சரி என்று சொல்லலாம் ஆனால் நான் இன்னும் இளமையுடனும் அழகாகவும் தான் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.