சினிமாவுல யார் கூடவும் நட்பு வெச்சுக்கக்கூடாது.. சூரியால் 3 வருடமாக மனமுடைந்த நடிகர் விஷ்ணு

Report
69Shares

சில ஆண்டுகளுக்கு முன் விஷ்ணு சூரி படங்கள் என்றாலே நல்ல ஒரு காமினேஷனாக இருக்கும். அப்படி இருந்த இருவரும் தற்போது எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் வீரதீரசூரன் என்கிற படம் தான்.

சில காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது. இதற்காக சூரி விஷ்ணுவிற்கு பணம் தரவேண்டி இருந்தது. அதை தரமறுத்து சில நில மோசடிகளிலும் இருதரப்பினரிடமும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து இருத்தரப்பினரும் போலிஸ் வரை சென்று புகாரளித்து சண்டையை பெரிதாக்கியுள்ளனர். சமீபத்தில் விஷ்ணு பேட்டியொன்றில், சூரி அண்ணன் செய்த காரியத்தால் மனமுடைந்து வருகிறேன் என்று புளம்பியுள்ளார்.

அதில் அவர் கூறியது, ‘கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நான் டிப்ரஷன்ல இருந்தேன்னு சொல்லியிருந்தேன். இப்போ யோசிச்சு பார்த்தா சூரி அதுல முக்கியமான காரணமா இருந்திருக்கார். தினமும் எனக்கு போன் பண்ணி என்னை 'நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட'னு டார்ச்சர் பண்ணி, என்னை புலம்ப வெச்சு ஒரு மாதிரியாக்கிட்டார்.

இதுல நான் கத்துக்கிட்ட விஷயம் ஒண்ணுதான். சினிமாவுல யார்கூடவும் ஃப்ரண்ட்ஷிப் வெச்சுக்கக்கூடாது. இதுதான் என் தரப்பு விஷயம். இதுக்கு பிறகு, சட்டப்படி என்ன பண்ணமுடியுமோ நான் பண்ணுவேன்" என்றார்.