பிக்பாஸ் வீட்டில் சாதி புறக்கணிப்பு நடக்கிறதா? ரம்யா பாண்டியனும் இப்படியா!

Report
14Shares

பிக்பாஸ் 4 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் நிகழ்ச்சியில் அனைவரையும் திண்டாடச் செய்தார். இதையடுத்து நேற்று பிக்பாஸ் வரலாற்றிலேயே நாமினேஷன் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்காக சேஃப் டோக்கனுக்கான போட்டி நடைபெற்றது.

இந்நிலையில் முதல் சீசன்களை போல இந்த சீசன் ஆரம்ப கட்டங்களில் அவ்வளவு சுறுசுறுப்பாகவும் பெரிய சண்டைகள் இல்லை என்கிற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க நாளுக்கு நாள் போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

தற்போது அனிதா சம்பத், பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு ரசிகர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து தற்போது ரம்யா பாண்டியனும் அந்த வரிசையில் இடம் பெற்று வருகிறார். சாதி அடிப்படையில் சிலர் நடந்து கொள்வதாகவும் தெரிகிறது. சுரேஷும் இப்படியான விமர்சனத்தில் சிக்கியதை அடுத்து ரம்யா பாண்டியனும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுடன் இப்படி பழகி வருவதாக தெரிகிறது.

பாடகர் வேல்முருகனுடன் இதுவரை அவர் எந்த ஒரு நல்லது கேட்டதையும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், வேல்முருகனிடம் ரம்யா பாண்டியன் அதிகமாக சாதி பார்த்து பழகுவதாகவும் தெரிகிறது.

இது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து ரம்யா பாண்டியன் மீது வைக்கப்பட்டு வருவதால் அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.