5 வருடத்திலேயே கோடிகளில் புறளும் நடிகை கீர்த்தி சுரேஷ்?.. இவ்வளவு கோடி சொத்தா?

Report
111Shares

சிறு பட்ஜெட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகை மேனகா சுரேஷ்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக களமிரங்கி இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தையும் பெற்று வருகிறார். குறுகிய காலத்தில் இளம்நடிகையாக அறிமுகமாகி அதன்பின் முன்னணி தென்னிந்திய நடிகையாக வளம் வருகிறார் கீர்த்தி.

மேலும் தமிழில் இவர் நடித்து வெளியான ‘மகாநதி’ படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

அதேபோன்று பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் உச்ச கதாநாயகியான விளங்கும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் இவர் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ள குட்லக் சகி மற்றும் மிஸ் இந்தியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

எனவே இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது ரூ. 1 கோடி சம்பளம் வாங்குவார். அதுமட்டுமில்லாமல் இவர் பயன்படுத்தி வரும் இரண்டு கார்களின் மதிப்பு மட்டும் ரூ. 3.5 கோடி.

மேலும் இவர் தற்போது தங்கியிருக்கும் சொந்த வீட்டின் மதிப்பு ரூ. 5 கோடி ஆகும். ஆகமொத்தம் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ. 15 கோடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை ரசிகர்கள் ஆவலுடன் அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், வாயைப் பிளந்தபடி ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் இந்த தகவலை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.