தொகுப்பாளினியை தனியாக வரச் சொன்னாரா கவிஞர் வைரமுத்து?.. ஆதாரத்தை வெளியிட்ட பிரபல பாடகி..

Report
973Shares

உலகில் பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக பல குற்றங்களும் கொடுமைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது சிறு குழந்தைகளையும் வேட்டையாடும் சமுகமாக மாறிவருகிறது.

இதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் குறைந்த பாடில்லை. இது சினிமாத்துறை சம்பந்தமாக பலருக்கும் பொருந்தும். அந்தவகையில் பல பிரபலங்களின் முகத்திரையை கிழித்து வருகிறது மீ டூ.

இதற்கு முதற்படியாக இருந்தவர் தமிழ் சினிமாவில் பாடலாசிரிய கவிஞர் வைரமுத்து. இவர் மீது கடந்த சில மாதங்களாகவே பாடகி சின்மயி என்பவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி வருகிறார்.

அதற்கு தகுந்த ஆதாரங்களை வெளியிட்ட போதிலும் வைரமுத்து மீது எந்த ஒரு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது போன்ற கருத்துக்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் வைரமுத்து இளம்பெண்யை அவர் பிரபல டிவி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றும் போதே தன்னுடைய தொடர்பு எண்ணைக் கொடுத்து தன்னை தனியாக வரச் சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து எதார்த்தமாக கேட்க சின்மயி பதார்த்தமாக விட்டுக் கொடுத்ததாகவும் தொடர்ந்து வைரமுத்து மீது குற்றம்சாட்டி வருகிறார்.

இது சமீபத்தில்தான் ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் ட்விட்டரில் சில ஆதாரங்களை வெளியிட்டு வைரமுத்துவை தாக்கிப் பேசி வருகிறார்.