என்னடா இங்க நடக்குது! அனிதா-சுரேஷை கிள்ளியும் தொட்டிலை ஆட்டியும் விடும் பிக்பாஸ்!

Report
14Shares

பிக்பாஸ் சீசன் 4ல் தற்போது இருவர் இருவராக சண்டைப்போட்டு கொண்டும் ஒருவரை கார்னர் செய்தும் வருகிறார்கள். அந்தவகையில் ஆரம்பத்தில் இருந்தே அனிதா சம்பத்திற்கும் சுரேஷுக்கும் இடையில் பல பிரச்சனைகள் நடைபெற்று வந்தன.

இதனால் மூஞ்சியை பாத்தாலே பேச பிடிக்காது என்று கூறினார் அனிதா சம்பத். எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையே எப்போது சமரசம் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்து வந்தனர்.

ரசிகர்களுக்கு புரளி பேசும் போட்டியாளர்களை கண்டாலே மிகவும் பிடித்து வருகிறது. அந்தவரிசையில் பிக்பாஸ் சுரேஷிற்கு கண்டண்ட் கொடுத்துள்ளார்கள்.

தற்போது அடித்துக்கொண்டு இருந்த அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் இணைந்து விட்டனர். பிக்பாஸ் கொடுத்த டான்ஸ் டாஸ்க்கில் இருவரும் ஏ ஏ சின்ன மச்சான் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இதை பார்த்த ரசிகர்கள் குழந்தையை தொட்டில் ஆட்டி தூங்க வைத்தும் கிள்ளியும் விடுகிறாரே இந்த பரட்டை என்று கிண்டலடித்து வருகிறார்கள்.