40 ஆண்டுகளாக பாக்யராஜ் முகத்தில் முழிக்காத ரஜினிகாந்த்? இந்த இயக்குநரின் வெற்றிதான் காரணமாம்!..

Report
5540Shares

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தன்னுடைய நடிப்பாலும் ஸ்டைலாலும் தமிழ் மட்டுமல்லாது இந்திய ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தன்னை அறிமுகப்படுத்திய பாலச்சந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ஆனது முதல் நடிக்கவில்லை.

அந்தவகையில் கடந்த 40 ஆண்டுகளாக பிரபல இயக்குநர் பாக்யராஜ் படத்தில் நடிக்காமல் இருந்து வருகிறார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஒருசில உண்மைகளாகவே இருக்கிறது.

அதில் முக்கிய காரணம் ரஜினியை வைத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்பி முத்துராமன் தான். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்ததால் மற்ற இயக்குனர்களை ரஜினிகாந்த் தேடி செல்லவில்லையாம்.

ஒருவேளை எஸ்பி முத்துராமன் ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்விகள் கொடுத்திருந்தால் ரஜினி மற்ற இயக்குனர்களை தேடிச் சென்றிருப்பார். இதற்கு இடையிலும் பாக்கியராஜ் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பு வந்ததாம்.

ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் அது கைவிடப்பட்டது. இருந்தாலும் அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற சில படங்களில் பாக்கியராஜ் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.