விஜய் சேதுபதியா! ஓட்டம் பிடித்த சைக்கோ நடிகை?.. ஓகே சொன்ன ராசி நடிகை..

Report
50Shares

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திர நடிகராக திகழ்ந்து பின் தன் நடிப்பு திறமையால் மக்கள் செல்வம் என்ற பெயரையும் பெற்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலைக்கு இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

இதையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் விஜய் சேதுபதி சில நாட்களுக்கு முன் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் கமிட்டாகி பர்ஸ்ட் லுக் புகைப்படத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் பலர் கண்டனம் கொடுத்ததால் படத்தில் இருந்து விலகி நன்றி வணக்கம் என்று கூறி கதையை முடித்துக்கொண்டார்.

தற்போது இவர் படம் என்றாலே சில நடிகைகள் ஓடிவிடுகிறார்களாம். அந்தவகையில் துக்ளக் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஒப்பந்தமாகி இருந்தாராம். ஆனால் சில கால்ஷீட் பிரச்சனையால் படத்தில் இருந்து விலகியுள்ளார் அதிதி ராவ்.

இதற்கு முழுக்க காரணம் முரளிதரன் வாழ்க்கை படம் தான் என கூறப்படுகிறது. இதையடுத்து அப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்ட நடிகை ராசி கண்ணா ஒப்பந்தமாகி ஓகே கூறியுள்ளாராம்.