இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று இருக்கும் கவுண்டமணி! இதுதான் காரணமா?

Report
144Shares

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் படத்தில் ஹீரோ பேசப்படுகிறார்களோ இல்லையோ இவரைதான் படத்தில் அதிகமாக பேசப்படுவார்கள்.

அந்தளவிற்கு படத்தில் இவரது காமெடி முக்கியத்துவம் பெரும். கவுண்டமணி காமெடி எனவே இருந்த காலகட்டங்களில் இவரது காமெடி காட்சிகளை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வருவார்கள்.

அதற்கு காரணம் இவருடைய காமெடி காட்சிகள் தான். முழுக்க முழுக்க நக்கல் நையாண்டி கலந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.

அப்படிப்பட்ட கவுண்டமணி சமீபகாலமாக சுத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். இடையில் சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.

இந்நிலையில் தொடர்ந்து படங்கள் கிடைத்தாலும் நடிக்காமல் உள்ளாராம். அதற்கு காரணம் கவுண்டமணிக்கு தற்போது 80 வயதுக்கு மேல் ஆவதால் அவருடைய குரல் வளத்தில் சிறிது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் முகமும் முன்னாள் மாதிரி பெரிய அளவு வசீகரம் இல்லாததால் அவரே சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டாராம்.

சினிமாவில் கவுண்டமணி நடிக்காவிட்டாலும் அவரது காமெடிகள் இன்னும் நம்ம சிரிக்கை வைக்காமல் இருப்பதில்லை. சில படங்களில் இவரது குரலை வைத்து கூட காமெடிகள் உருவாக்கப்படிருக்கும்.