பணமா? சிறையா? காசுக்காக நட்பை விரோதித்த நடிகர் சூரி? சிறைக்கு செல்லாமல் தடுத்த நீதிபதி

Report
1330Shares

வீரதீரசூரன் படத்தின் போது அப்படத்தின் இயக்குநர், விஷ்ணு விஷால் மற்றும் அவரின் தந்தை ரமேஷ் குடாவாலா ஆகியோர் ஏமாற்றியதாக தொடர்ந்த வழக்கி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஷ்ணு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அன்புவேல்ராஜன் சூரிக்கு விற்றுகொடுத்த நிலம் மதிப்புள்ளது. தேவையில்லாமல் வழக்கு தொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

சூரி தரப்பில், சூரி கிராமத்து இளைஞர் என்பதால் 3 கோடி மதிப்புள்ள இடத்தினை 5.57 கோடிக்கு விற்றுள்ளதாக கூறி ஏமாற்றியுள்ளார்கள். சாலை வசதி இல்லாத இடம்தான் அது என்றும், விஷ்ணுவின் தந்தை முன்னாள் போலிஸ் அதிகாரி என்பதால் நம்பி ஏமாந்துள்ளார்.

இருதரப்பு வாதத்தினை கேட்ட நீதிபதி சூரி உங்களுக்கு பணம் வேண்டுமா தயாரிப்பாளரை சிறைக்கு அனுப்ப வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதற்கு சூரி தரப்பு வழக்கறிஞர் எங்களுக்கு பணம் மட்டும் போதும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, அன்புவேல்ராஜனை கைது செய்யாமல் சூரிக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை 24ம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.