சூரரைபோற்று படத்தில் இதற்காக கதறினாரா நடிகர் சூர்யா? இதுதான் காரணமாம்!

Report
16Shares

இந்திய முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி நவம்பர் 11ல் ஓடிடி தளத்தில் வெளியிட்ட நல்ல விமர்சனத்தையும், மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இப்படத்தில் 96 கேரக்டர்கள் இடம்பெறுகிறது. சூர்யா 18 வயது இளைஞர், 30 வயது நடுத்தர வயதுடையர், 50 வயதை தாண்டியவர் என 3 கெட்அப்களில் நடித்துள்ளார். இதில் 18 வயது இளைஞர் வேடத்தில் சூர்யா பிடிவாதமாக மறுத்துள்ளார்.

தனக்கு 45 வயதாகி விட்டதாகவும், 18 வயது இளைஞனாக நடித்தால் சரியாக இருக்காது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இயக்குனர் சுதா கொங்கரா வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார்.

இதுகுறித்து சூர்யா கூறும்போது "திடீரென்று சுதா என்னை இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். கடைசி வரை வேறு யாரைவாது வைத்து செய்துவிடுங்கள், எனக்கு 45 வயதாகப் போகிறது எனச் சொன்னேன்.

ஆனால் வற்புறுத்தி நடிக்க வைத்து விட்டார். என்றார். ஏற்கெனவே வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா 18 வயது இளைஞனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.