கவின்-லாஸ்லியாவை தொடர்ந்து காதலில் சிக்கித்தவிக்கும் பாலா-ஷிவானி.. கோபத்தில் ரசிகர்கள்..

Report
159Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி சினிமாவில் அறிமுகப்படுத்த வைக்கும் புதிய ஜார்னராக அமைந்து வருகிறது. பல பிரபலங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைக்கும் நிலைக்கு பிரபல தொலைகாட்சி நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் 4ஐ ஆரம்பித்து சிறப்பாக வழித்து வருகிறார் கமல்.

இந்நிலையில் போட்டியாளர்களிடையே பல சண்டைகள், பாசம் என மாறி மாறி அமைந்து வருகிறது.

தற்போது இன்று பிக் பாஸ் எவிக்சன்னுக்காக தேர்வானவர்களின் பெயர்களை வரிசையாக கூற ஆரம்பித்தார். மேலும் சிடுமூஞ்சி மேக்ஸிமம், காதல் கண்ணை மறைக்குது போன்ற காரணங்களால் தான் இவர்கள் தேர்வு செய்யப் பட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதனால் கோபமடைந்த பாலாஜி, ‘யாருக்கும் காதல் கண் கட்டல. காதலும் கிடையாது ஒன்னும் கிடையாது. யாராச்சும் இந்த மாதிரி என் முன்னாடி பேசாதீங்க..பேசினா அவ்வளவுதான்!’ என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் ஷிவானியிடம் சென்று, ‘ஷிவானி எனக்கு உன் மேல காதல்லாம் கிடையாது.. சப்போஸ் வந்தா சொல்றேன்! ஆனா வராது’ என்று கூறி, ஷிவானியை ஷாக் ஆக்கினார்.

இந்த வீடியோவை பார்த்த அனைவரும், ‘அப்போ எதுக்குடா இத்தனை நாள் ஒன்னா சுத்துன’ என்று பாலாஜியை சரமாரியாக விளாசி வருகின்றனர்.