விஜய் வெறும் காப்பி அடிக்குற இயக்குனர் படத்தில் தான் நடிப்பாரா? மாஸ்டர் படமா? மலையாள படமா?

Report
65Shares

தமிழ் சினிமாவைவிட பல மொழிப்படங்கள் வேற்று மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்படுகிறது. அதிலும் காப்பி ரைட்ஸ் வாங்கிய பின்னர் தான் படத்தினை இயக்கவும், தயாரிக்கவும் நடிகர் நடிகைகள் ஒப்புகொண்டு நடிப்பார்கள்.

அந்தவகையில் காப்பி ரைட்ஸ் படம் என்றால் தமிழ் சினிமாவில் விஜய் படங்கள் தான் சமீபத்தில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் இயக்குநர்களின் கதைகளம் தான். முருகதாஸ், அட்லீயைத் தொடர்ந்து தற்போது, மாஸ்டர் படம் பிரபல மலையாள படம் ஒன்றின் காப்பிதான் என தல அஜித் ரசிகர் ஒருவர் சமூக வளைதளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் பீஸ். இந்தப்படத்திலும் மம்முட்டி அதிரடி கலந்த வாத்தியாராக நடித்திருந்தார்.

மாஸ்டர் பீஸ் படத்தின் அச்சு அசல் காப்பிதான் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் என சமூக வளைதளத்தில் பரப்பி வருகின்றனர்.

மேலும் ஒரு தல ரசிகர் இந்த மொக்கை டீசருக்கா இவ்வளவு நாள் வெயிட் செஞ்சீங்க என பங்கமாக கலாய்த்துள்ளார். இதனால் வழக்கம்போல் ட்விட்டரில் காரசாரமான வாதம் நடந்து கொண்டிருக்கிறது.