8 மாதமாக எங்கே போனார் போனிகபூர்.. அஜித்தின் வலிமை படத்தால் போஸ்டர் அடித்து கேலி செய்யும் ரசிகர்கள்..

Report
6Shares

கொரானா லாக்டவுனால் பல படங்களின் படப்பிடிப்பு, இசை வெளியீட்டுவிழா, ரிலீன்ஸ் போன்றவற்றை தள்ளிப்போட்டு வருகிறது சினிமாத்துறை. அதில் பல படங்கள் பல இழப்புகளை சந்தித்து வரும் சூழலுக்கு தள்ளப்பட்டது. தற்போது லாக்டவுன் முடிந்து தியேட்டர்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் திறக்கபட்டது.

இதையடுத்து சில படங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு விஜய், அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டத்தினை கொடுத்தாலும் விஜய் மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை அளித்து சாதனை படைத்தார்.

ஆனால், வலிமை படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றனர்.

மேலும் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் காணவில்லை என்ற போஸ்டரை அடித்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் தல ரசிகர்கள்.

ஏனெனில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் தல அஜித்தின் வலிமை படமானது கொரோனா பொது முடக்கத்தால் நிறுத்தில் வைக்கப்பட்டு, தற்போது தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் கடந்த எட்டு மாதங்களாக எந்த ஒரு அப்டேட்டும் வலிமை படத்தைப்பற்றி சமூக வலைதளங்களில் போனிகபூர் மற்றும் படக்குழுவினர் வெளியிடாததால் கடும் கோபத்தில் மதுரை தூங்கா நகர் அஜித் ஃபேன்ஸ் இப்படி ஒரு செயலை செய்துள்ளனர்.

மேலும் இந்த போஸ்டர் ஆனது வலிமை படத்திற்காக தல அஜித் ரசிகர்களின் ஏக்கத்தை வெளிக்காட்டுவதாக தெரிகிறது.