15 வயதில் நடிகையாக பணத்தில் புரளும் விக்ரமின் ரீல் மகள் சாரா.. இந்த நடிகையுடனா?

Report
1662Shares

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடிக்கும் பல குட்டீஸ் இருக்கிறார்கள். அதேசமயம் நடிகர் நடிகையாகவும் ஆசைப்பட்டு சினிமாவில் வாய்ப்பினை பெற்று வருகிறார்கள்.

அந்தவகையில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் சாரா அர்ஜுன்.

நடிகர் விக்ரமிற்கு மகளாக தெய்வத்திருமகள் படத்தில் நடித்து நல்ல இடத்தினையும் விருதினையும் வாங்கி பல படங்களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சாரா தற்போது கல்லூரி மாணவியாக ஒரு Quotation Gang என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். நடிகை பிரியாமணி லீட் ரோலில் நடிக்கவிருக்கும் இப்படத்தில், பழிவாங்கும் மாணவியாக நடிக்கவிருக்கிறார்.

அருண்விஜய் நடித்த பாக்ஸ்ர் படத்தின் இயக்குநர் விவேக் இப்படத்தினை இயக்கவுள்ளார். வரும் டிசம்பர் மும்பையில் படப்பிடிப்பு துவங்கி கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மீண்டும் மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடிக்கவிருக்கிறதாம்.

இதற்கு பிறகு சாரா அர்ஜுனுக்கு நல்ல எதிர்காலமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.