தளபதி விஜய் நயன்தாராவை ஒதுக்க இது இதுதான் காரணமா? ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
1263Shares

நடிகர் விஜய் தமிழ் சினிமாவை தாண்டி பல மொழி ரசிகர்களை தன் பின்னால் வைத்து ரசிக்க வைத்து வருகிறார். இதை தொடர கடந்த ஆண்டு ஆரம்பித்த மாஸ்டர் படத்தின் வெளியீட்டினை காக்கவும் வைத்து வருகிறார்.

இதற்கிடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி பல சாதனைகளை பெற்று நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் விலகிவிட்டார்.

இதன்பின் நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனின் கதையை கேட்க சொல்லி விஜய்யிடம் சிபாரிசு செய்தாராம்.

அதற்கு நடிகர் விஜய் மறுத்துவிட்டாராம். இதனால் நடிகை நயன்தாரா அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இப்படத்தை இயக்க போகிறார் என்று ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியானது.

எதுவாக இருந்தாலும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து வெளிவரவிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.