பிரபல பெண் இயக்குநரிடம் 6 விஷயம் கத்துகிட்டேன்! என்னை பெருமைபடுத்தவில்லை..அவரைதான்!-பாலா

Report
9Shares

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இயக்குநர்கள் இருந்து வந்தனர். அதில் 90களில் முக்கியமானவர்கள் மணிரத்னம் மற்றும் பாலா. தமிழ் சினிமாவில் பல காதல் கதைகளத்தினை கலைநயத்தோடு சொன்னவர் மணிரத்னம்.

அதேசமயம், கடுமையான உழைப்பு உடலை வறுத்திக்கொண்டு நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பவர் பாலா. இவ்விரு இயக்குநர்களிடன் உதவி இயக்குநராகவும் அசோசியேட் இயக்குநராகவுன் இருந்து புகழ் பெற்றவர் சுதா கொங்கரா.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் இறுதி சுற்று படம் அனைவரையும் கவந்தது. தற்போது சூர்யாவை வைத்து சூரரை போற்று படத்தினையும் வெற்றிகரமாக அமேசான் பிரைமில் வெளியிட்டு சாதனையை படைத்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சுதா கொங்கராவை நினைத்து அவரை வளர்த்த இரு இயக்குநர்கள் பெருமையுடன் பேசும் காட்சி இணையத்தில் வெளியாகி பாராட்டினை பெற்றுள்ளது.

என்னை பெருமைப்படுத்தவில்லை மணிசாரை தான் சுதா பெருமைபடுத்திருக்கிறார். மேலும் இயக்குநர்களில் ஆண் பெண் என்று வேறுபாடு இல்லை என்ற கருத்தினையும் குறிப்பிட்டிருந்தார். 6 விஷயங்களை சுதாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.