கோடிகளுக்காக ஆசைப்பட்டு சின்னத்திரையில் பணத்தில் புரளும் நடிகை சமந்தா.. ஆரம்பமே இந்த நடிகருடனா?

Report
13Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கனவுக்கன்னியாகவும் பிஸி நடிகையாகவும் இருந்து வந்தவர் நடிகை சமந்தா. இவர் தான் என் படத்திற்கு செட்டாகும் என்று பல இயக்குநர் தயாரிப்பாளர்கள் கூறி கமிட்டாக்கி வருகிறார்கள்.

நடிகைகளுக்காக போட்டிபோடும் நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சினிமாவில் நடித்தும் வருகிறார். லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் பல விஷயங்களை செய்து வந்த சமந்தா, சின்னத்திரையில் வரும் வாய்ப்புகளையும் சமந்தா விட்டுவைப்பதில்லையாம். தெலுங்கு பிக்பாஸில் சமந்தா சில நாட்களாக மாமனாருக்கு பதில் நடுவராக கலந்து கொண்டார்.

மேலும், திருமணத்திற்குப் பின் கூட முன்னிலை நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு தற்போது அடுத்தப்படியாக OTT தளத்தில் தொகுப்பாளினியாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தி கொண்டிருக்கிறார்.

அதுவும் முதல் நிகழ்ச்சியை விஜய் தேவர்கொண்டாவை பேட்டி எடுத்து OTT தளத்தை அதிர வைத்துள்ளார் சமந்தா. சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் பிரபலமாகி வரும் சமந்தாவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

மொத்தம் 10 எபிசோடு என்று பார்த்தால் 1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் சமந்தா. சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சமந்தாவை பார்த்து ஆச்சரியத்தில் உள்ளனர் சினிமா துறையினர்.

அதே சமயம் பட வாய்ப்புகளில் கவனம் இல்லாதது போல் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பணத்தாசை யாரை தான் விட்டு வைத்தது என்பது போன்ற ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.