முதல் மனைவி, நயன்தாரா என கழட்டிவிட்டு ரகசியமாக இரண்டாம் மறுமணம் செய்த பிரபுதேவா!.. இதுதான் காரணமா?

Report
24Shares

சினிமாவில் பிரபலங்கள் எப்போது காதலிப்பார்கள் திருமணம் செய்வார்கள் என்று கணித்து யாராலும் கூற முடியாது. அந்த அளவிற்கு அவர்களின் முரண்பாடான கருத்துக்களும் நோக்கமும் இருக்கும். அதில் சமீப காலமாக திருமணம் செய்தால் தன்னுடைய மார்க்கெட் இழந்துவிடுவோம் என்ற காரணங்களும் இருக்கிறதாம்.

அதை பின்பற்றி வருபவர்களில் ஒருவர் நயன்தாரா. இவர் கடந்த 2009ல் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து பின் மூன்று வருடங்கள் கழித்து சில காரணங்களால் விலகி விட்டார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது.

இதனால் முதல் மனைவி ரம்லதா கடும்கோபத்தில் நயன் தாராவை திட்டியும் புகாரளித்தும் வந்தார். பின் அவரையும் விவாகரத்து செய்து பிரபுதேவா தனிக்கட்ட ராஜாவாக சினிமாவில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவருக்கும் உறவினர் பெண்ணிற்கு திருமணம் முடிந்துவிட்டது என்று செய்தி வெளியானது. பிசியோதெரபி பெண் மருத்துவ நிபுநரை பிரபுதேவா திருமணம் செய்துள்ளார்.

பெண்ணைப்பற்றி விவரம் எதுவும் இல்லாமல் ரகசியமாக திருமணம் செய்த காரணம் சில கூறப்பட்டு வருகிறது. நயன் தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஊர்சுற்றி வருவதை பார்த்து பிரபுதேவா கடும்கோபத்தில் இதை செய்திருக்கலாம் என்றும் தன்னுடைய இரு மகன்களின் எதிர்காலத்திற்காக இதை செய்திருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறதாம்.