இதெல்லாம் ஹனிமூன்ல தேவையா? நடிகை காஜல் அகர்வால் கணவருடன் வெளியிட்ட நீச்சல் புகைப்படம்.

Report
20Shares

தென்னிந்திய சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். குறுகிய கால கட்டத்தில் அதுவும் 10 வருடத்திற்கு முன்பே இந்த நிலைக்கு வந்த நடிகைகளின் வரிசையில் இருப்பவர் காஜல்.

முன்னணி நடிகர்கள் மற்றும் இளம்நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். கொரானா லாக்டவுனிற்கு பிறகு படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் காஜல் திருமணத்தகவலை அதிகாரப்பூர்வமாக கூறி ஷாக் கொடுத்தார்.

இதையடுத்து, கடந்த 30 ஆம் தேதி காஜல் அகர்வாலுக்கும், தொழிலதிபரான கௌதம் கிட்சலு என்பவருக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது என்பது நாம் அறிந்ததே. அதற்குப்பிறகு காஜல் அகர்வால் தன்னுடைய காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டில் செட்டில் ஆகி இருக்கிறார்.

அந்தப் புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் காஜல். இந்தநிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய காஸ்ட்லியான ஹனிமூனுக்காக செலவிட்ட தொகையைப் பற்றிய விபரம் இணையத்தில் தீயாய் பரவி, ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.

அதாவது காதல் கணவருடன் காஜல் அகர்வால் ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தும் பல புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு ஹனிமூனையும் ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார்.

இவ்வாறு ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி, தன்னுடைய ஹனிமூனை ஜாலியாக என்ஜாய் செய்து வரும் காஜல், தன்னுடைய ஹனிமூனுக்காக சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், கடலுக்கு அடியில் கணவர் கௌதமுடன் நீச்சலடிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடலுக்கு அடியில் தனிமையில் இருங்கள். நீங்கள் உணராத கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்வீர்கள். நான் கடலை நேசிக்கிறேன். எப்போதும் நீல நிறத்தை விரும்புவேன். மிகவும் அமைதியானது, அதோடு பயமும் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.