தனிமையில் புளம்பித்தள்ளு பிக்பாஸ் பிரபலம்.. சுச்சிலீக்ஸ்க்கு பிறகு இப்படிவொரு பாதிப்பா?

Report
14Shares

சினிமாவில் பல பாடல் கலைஞர்கள் ஒவ்வொரு படத்தில் அறிமுகமாகி தங்கள் திறமைகள் அடுத்தடுத்த படங்களில் பாடி வருவார்கள். ஆனால் அப்பாடல் ரசிகர்களை கவர்ந்ததாகவும் இருக்க வேண்டும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாகவுன் ஆர்ஜே வாகவும் இருந்து பிரபலமானவர் சுசித்ரா.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மன அழுத்தத்தால் சுச்சி லீக்ஸ் என்ற ஹாஸ்டேக்கில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். தற்போது அந்த சம்பவம் மறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதேதோ பேசி புலம்புவதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பலர் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு வருவதோடு, பிக் பாஸ்க்கு பல அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் சுச்சி ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக நடந்து கொள்வதோடு, திடீரென ஓவர் எமோஷனல் ஆகிறார். மேலும் நேற்று முன்தினம் பிக்பாஸிடம் தனியாக பேசிய சுச்சி, மற்றவர்களைப் பார்த்து திடீரென கோபப்படுவது, சிரிப்பது, திட்டுவது என பல ரியாக்சன்களை ஒரே நேரத்தில் கொடுத்தார்.

இதைப்பார்த்த ஹவுஸ்மெட்ஸ் சுச்சிக்கு என்ன ஆச்சு என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இவ்வாறிருக்க நேற்றைய எபிசோடில், காலையிலேயே சுசித்ரா பாத்ரூம் ஏரியாவில் தனியாக நின்று புலம்பத் தொடங்கினார். அதாவது சுசித்ரா பிக் பாஸிடம், ‘இதைவிட வெளிஉலகம் பெட்டர்ரா இருக்கும் பிக் பாஸ்.. பொய்யா சிரிச்சு.. பொய்யா நடிச்சு.. எதுக்கு இருக்கணும்? அப்படி ஒரு அவசியமே இல்ல பிக் பாஸ்’ என கூறியிருந்தார்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பு சுசித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்வதாக கூறி அலறியடித்து ஓடி வந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் சுசித்ரா இவ்வாறு வித்தியாசமாக நடந்து கொள்வதைப் பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிக்பாஸிடம், ‘சுசித்ராவ சீக்கிரம் வெளியே அனுப்பினா உங்களுக்கு நல்லது’ என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.