புரளிபேசி முதன்முதலில் மாட்டிகொண்ட நடிகை ரம்யா பாண்டியன்! லீக்கான வீடியோ.

Report
29Shares

பிக்பாஸ் சீசன் 4 சிறப்பாக பாதி நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எலிமினேஷன் வாரம் வாரம் கமல் கூறி வெளியே அனுப்பி வைத்து வருகிறார். இந்த போதிலும் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கடுமையான டாஸ்க்குகள் கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.

புரளி பேசி பல பிக்பாஸ் மாட்டிக்கொண்டு வந்த நிலையில் இதுவரையில் எந்த ஒரு சர்ச்சையிலும் தான் உண்டு அவர் உண்டு அவர் டாஸ்க் உண்டு என்று மற்ற போட்டியாளர்களுக்கு எல்லாம் சவாலாக இருந்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

ஆனால் அதை உடைத்து தற்போது ஷிவானியைப் பற்றி கடுமையாக விளாசியுள்ளார். ஆஜித், ரம்யா பாண்டியன், சம்யுக்தா ஆகியோர் “இந்த வாரம் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்கள் யார்?” என்று விவாதித்துக் கொண்டிருந்த போது ‘சுசித்ராவும் ஷிவானியும் தான்’ என்று ஆஜித் பதிலளித்தார்.

சம்யுக்தா, ஏன் ஷிவானியை சுவாரசியம் குறைந்தவர் என்று சொல்கிறீர்கள்? என கேட்டதற்கு ரம்யா பாண்டியன், ‘பாலாவை என்டர்டைன்மென்ட் செய்வதில் தான் ஷிவானியின் முழு கவனமும் இருக்கிறது. பாலா மாமா பாலா மாமா.. என அவரையே சுற்றி வருகிறார்’ என்று ஷிவானியைப் பற்றி ரம்யா புறணி பேசியுள்ள வீடியோவை தற்போது பிக்பாஸ் பிரமோவில் வெளியிட்டு வைரலாகி வருகிறது.

இப்படி ஒரு ரம்யாவை இதுவரை பிக்பாஸ் வீட்டில் பார்த்ததில்லையே என்று அவரது ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.