முன்னாள் காதலர் பற்றிய ரகசியத்தை உடைத்த ஐஸ்வர்யா ராய்.. திருமணமாகியும் காதலிச்சாங்களோ!

Report
29Shares

சினிமா பிரபலங்கள் தன்னுடன் பணியாற்றும் நடிகர் நடிகைகளை காதலிப்பது வழக்கம். அந்தவகையில் காதல் ஜோடியாகவும் இருந்து திருமணமும் செய்தும் வாழ்ந்தும் வருவார்கள். அந்த லிஸ்ட்டில் பாலிவுட் சினிமாவில் முன்னணியாக இருப்பது ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன்.

தற்போது ஒரு மகள் இருக்கும் நிலையிலும் இருவரும் படங்களில் நடித்தும் வருகிறார்கள். அபிஷேக் பச்சனுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானை ரகசியமாக காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டு, கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், பேட்டியொன்றில் சல்மான் கான் பற்றி பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர்களில் சல்மான் கான் தான் மிகவும் அழகான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டவர் என கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

அதாவது ஐஸ்வர்யா ராய் அழகி பட்டம் பெற்ற பின் சிமி கரிவால் என்பவருக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் சிமி ஐஸ்வர்யா ராயிடம், ‘பாலிவுட்டில் உள்ள நடிகர்களில் யார் கவர்ச்சியானவர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஐஸ்வர்யா ராய் சற்றும் யோசிக்காமல், சல்மான் கான் தான் என்று பதில் கூறி இருப்பதோடு, அவர் அனைவரையும் ஈர்க்கும் முகத்தோற்றம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐஸ்வர்யாராய் சல்மான்கானுடன் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘ஹம் தில் தே சுகே சனம்’ படத்தில் நடித்தாராம். அப்படத்தில் தான் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்பட்டது.

எனவே, இவ்வாறு ஐஸ்வர்யா ராய் தன்னுடைய முன்னாள் காதலனை பற்றி பேசியிருக்கும் இந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.