
சினிமாவில் ஆரம்பகாலத்தில் குடும்ப கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுத்து அதன் பின் க்ளாமர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக செல்வது நடிகைகளின் வழக்கம். ஆனால் தற்போது க்ளாமர் ரோல் இருந்தால் தான் பிரபலமாக முடியும் என்ற எண்ணத்தோடு சினிமாவில் எண்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.
அப்படியாக, குழந்தை பருவத்திலேயே திரையுலகிற்கு ‘ரிக்ஷா மாமா’ என்னும் படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி. இதையடுத்து நடிகையாக தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் அறிமுகமாகி நடித்தார்.
இதையடுத்து சினிமாவில் முழுக்கு போட்டு நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரிற்கு 2009ல் திருமணம் அரங்கேறியது. அந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக நடிக்கும் இவரது கவர்ச்சி புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரல் ஆகி வந்ததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதனை சிலர் சில்க் சுமிதாவுக்கே போட்டியாளராக இருந்திருப்பாரோ! என நகைச்சுவையாக பதிவை தெரிவிக்கின்றனர்.