ஊர்சுற்றலாம் அதுமட்டும் வேண்டாம்! இளம் இயக்குநர்களை கடுப்பேற்றும் முன்னணி நடிகையின் காதலர்!

Report
54Shares

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக களமிரங்கி அதன்பின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து டாப் நடிகையாக மின்னுபவர் அந்த முன்னணி நடிகை. பல காதலால் ஏமாந்து பின் ஒரே ஒரு படத்தில் இயக்கிய இயக்குநரின் வலையில் சிக்கினார் நடிகை.

இதையடுத்து எங்கு சென்றாலும் கடந்த 5 வருடங்களாக ஜோடியாக சென்றும் ஊர்சுற்றியும் வருகிறார். வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் சூட்கேஸ் தூக்கும் நபராகவும் மாறி வருகிறார் என்று கிண்டல்கள் செய்வது வழக்கமாகிவிட்டது.

பொட்டி தூக்கியதோடு நிறுத்தினால் பரவாயில்லை. என்னமோ ராஜமௌலி, சங்கர் ரேஞ்சுக்கு பெரிய இயக்குனர் என நினைத்துக்கொண்டு இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் தலையிட்டு குளறுபடி செய்கிறாராம்.

பத்தாததுக்கு சமீபத்தில் தனது காதலியின் பணத்தில் சொந்த தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து தனது காதலியையே ஹீரோயினாக போட்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த இயக்குனர்.

அந்த படம் ஏற்கனவே ஒரு கொரியன் படம் காப்பி என பெயர் அடிபட்ட நிலையில் அதைக் கூட அந்த இளம் இயக்குனரை உருப்படியாக செய்ய விட மாட்டேன் என்றாராம் அந்த காதலர். இதை அப்படி செய், அதை இப்படி செய் என உயிரை வாங்குகிறாராம்.

உனக்கு வேலையும் தெரியல, பேசாம உட்காரு என்று சொன்னாலும் கேட்க மாட்டேங்குற என கடுப்பில் வேலை செய்கிறாராம் அந்த இளம் இயக்குனர்.

எது எப்படியோ, இன்னும் கொஞ்ச நாளில் அந்த நடிகையுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நடிகைக்கு பட வாய்ப்பு தர முடியாது என ஒரு முடிவு எடுத்தால் தான் அவர் திருந்துவார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.