ஈரம் நடிகை சிந்துமேனனா இது? இரு குழந்தைகளுக்கு தாயானபின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்..

சினிமாவில் வயதானால் தான் சினிமாவில் இருந்து விலகும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் நடிகைகள். ஆனால் ஒரு சில காரணங்களால் கூட சினிமாவில் இருந்து நடிகைகள் வெளியேற காரணமாக இருக்கிறது.
அதாவது திருமணம் செய்த பின், மார்க்கெட் இல்லாமல் என காரணங்களை கூறலாம். அந்தவகையில், 2001ல் வெளியான சமுத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன்பின், கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தமிழ் சினிமாவுக்கு வராமல் தொடர்ந்து கன்னடா, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தியிருந்தார்.
ஈரம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் சில படங்களில் நடித்த பின் 2010ல் டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இதையடுத்து, தற்போது 34 வயதில் சிந்து மேனன் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பத்தை பார்த்துக்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே உடல் எடை கூடி இருந்த நிலையில் தற்போது கர்ப்பமாகியுள்ளார். வரும் 2021 பிப்ரவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று அவரது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் உடல் எடை கூடியது போல் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.