வி ஜே சித்ரா வழக்கில் அடுத்த புதிய திருப்பம்! ஆர்டிஓ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

Report
56Shares

கடந்த வருடம் 2020 உலகையே ஆட்டிப்படைத்த ஆண்டாகி மாறி பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கியது. அதேசமயம் சினிமாத் துறையினருக்கும் சில அதிர்ச்சி சம்பவங்களையும் கொடுத்து வந்தது. திரைத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகளின் தற்கொலை சம்பவத்தில் தமிழ் சின்னத்திரையில் வி ஜே சித்ராவின் தற்கொலை தற்போது அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.

கடந்த டிசம்பர் 9 காலை ஓட்டலில் தற்கொலை செய்ததை அடுத்து பல திருப்பங்களும் பரபரப்பான சூழலும் நிலவி வருகிறது. வழக்கு சம்பந்தமாக நண்பர்கள், உறவினர் உள்ளிட்ட 15 பேருக்கும் மேல் விசாரணை நடத்தியதில் வி ஜே சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஆர்டிஓ தரப்பில் விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆனையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சித்ரா வழக்கில் மேலும் பல திருப்பங்கள் நிகழலாம் என்று போலிசார் தரப்பில் கூறப்படுகிறது.