பெற்ற மகளை இப்படியா பேசுவது! ஷிவானி அம்மாவை விளாசிய பிரபல பாடகி!

Report
9Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெருமளவில் ரசிகர்களால் விமர்சித்து வரும் நிகழ்ச்சியாக இருப்பது பிரபல தொலைக்காட்சி ஒளிப்பரப்பி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. 80 நாட்களை கடந்து ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது இந்நிகழ்ச்சி.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெத்த மகளையே அசிங்கமாக பேசி, திட்டினார் ஷிவானியின் அம்மா. டி.ஆர்.பி.க்காக அந்த அம்மாவை இப்படி பேச வைத்தார்களா, இல்லை இது தான் அவரின் குணமா என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கேட்டு வருகிறார்கள்.

தற்போது பல பிரபலங்கள் கூட இதற்காக எதிர்த்தும் ஷிவானியின் அம்மாவிற்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். மகளின் கேரக்டரை அசிங்கப்படுத்துகிறாரே, யார் தவறாக பேசினாலும் ஷிவானிக்கு அவர் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.

ஷிவானியின் அம்மா செய்தது தவறு என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார். இதற்கு முழு ஆதரவு தருகிறேன் என்று பிரபல பாடகி சின்மயி அவரது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை. ஆனால் இந்த தாய் தன் மகளையே அசிங்கப்படுத்தியது எனக்கு தவறாகத் தெரிகிறது.

உங்கள் கேரக்டரை அசிங்கப்படுத்தும் தாய் இல்லை என்றால் நீங்கள் லக்கி என்று உணருங்கள். ஹேர் ஸ்டைல், காஜல் அல்லது லிப்ஸ்டிக் போன்ற சாதாரண முடிவுகளுக்கு கூட மகள்களை விலைமாது என்று அழைக்கும் நோய் இந்திய பெற்றோர்களுக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் பாடகி சின்மயி.