விஜய்யின் அந்த படத்தில் நான் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் அக்கடதேச நடிகை..

Report
18Shares

தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு ரசிக்க வைத்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் சமுக அக்கரை கொண்டு இருப்பதால் பொதுமக்களிடையே அவரின் படம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூர் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறார்.

தளபதி விஜய் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் ஆசைப்பட்டு வரும் நிலையில் அவருக்கு ஜோடி போட்டு நடிக்கவும் எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்து வருகிறார்கள் தென்னிந்திய நடிகைகள்.

அந்தவகையில், தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் பெரும்பாலும் மகிழ்திருமேனி தான் எனவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தளபதி 67 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் கண்டிப்பாக நான்தான் ஹீரோயின் என அடித்துச் சொல்கிறார் சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால்.

சமீபத்தில் யூடியூபில் தளபதி 67 படத்தில் கண்டிப்பாக நான்தான் ஹீரோயின் எனவும், அதற்குள் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக மாறி விடுவேன் எனவும் மிகவும் தைரியமாக நிதி அகர்வால் கூறியுள்ளது இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.