கமல் என் நண்பர்! கணவர் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட பூஜா குமார்!! ஷாக்காகும் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை கிசுகிசுக்களில் அதிகமாக சிக்கிய நடிகர் என்று கூறினார் அதில் முதலிடத்தில் இருப்பவர் நடிகரும் உலகநாயகனுமான கமல் ஹாசன். தான் நடித்த படங்களின் நடிகைகளுடன் பல வதந்திகளை சந்தித்து வந்தார்.
அதில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய கமல்பட நடிகை பூஜா குமார். விஷ்வரூபம் படத்தின் மூலம் கமலுடன் தொடர்பில் இருந்தேனா அவர் என் நெருங்கிய நண்பர் அவரின் குடும்த்தாரும் எனக்கு நெருக்கம் என்று கூறி சமீபத்தில் பேட்டியொன்றில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
இந்நிலையில், பூஜா குமாருக்கு திருமணமான செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாகவும், பூஜா சமூகவலைத்தளங்களில் இருந்தபோதிலும் இதுபற்றி அவர் எப்பொழுதும் பேசியதே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
கணவர் விஷால் ஜோஷி, தன்னுடைய பிறந்த நாளான நேற்று பூஜா குமாருடன் திருமணமானதை பற்றியும், அவர்களுக்கு பிறந்துள்ள குழந்தை பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அந்தப் பதிவில் விஷால், தங்களது நாவ்யா ஜோஷியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், பூஜா தன்னுடைய இந்த பிறந்தநாளை மிகச்சிறந்த மாற்றியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரை வியக்க வைத்துள்ளது.