சித்ரா இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறுத்தமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Report
248Shares

சின்னத்திரையில் பெருமளவில் பார்த்து வருவது பிரபல தொலைக்காட்சிகளின் சீரியல் தான். அதில் சமீபகாலமாக இல்லத்தரசிகளை விட இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

குடும்ப பாங்கான கூட்டு குடும்பத்தை பற்றிய இச்சீரியலில் முல்லை கதாபாத்திரம் அனைவரையும் கவந்து ஈர்த்த நிலையில் முல்லையாக நடித்த வி ஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முல்லைக்கு பதிலாக நடிகை காவியா நடிக்க ஆரம்பித்துள்ளார். என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் புதிய முல்லையாக காவியா வந்தாலும் பழைய முறையான சித்ராவை ரசிகர்கள் இண்ணமும் மிஸ் செய்துதான் வருகிறார்கள்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறுத்தப்படுவதாக செய்தி இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், நாம் விசாரித்ததில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடவில்லை, நிறுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி சீரியல் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவும் கூறவில்லை. ரசிகர்கள் இதுபற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ரசிகர்கள் மத்தியும் கூறப்பட்டு வருகிறது.