சுஷாந்த் தற்கொலையை மிஞ்சும் விஜே சித்ராவின் தற்கொலை? குடி-கஞ்சா மீது அடிமைதான் காரணம்!

Report
243Shares

சமீபகாலமாக சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மன உளைச்சலாலும், மர்மமான முறையிலும் தற்கொலை செய்து கொண்டு இறப்பது வழக்காமாகி அதிர்ச்சியை அளித்து வருகிறது.

அந்தவகையில் கடந்த இரு தற்கொலை வழக்குகளான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலையும் தமிழ் சின்னத்திரை நடிகை வி ஜே சித்ராவின் தற்கொலையும் நீண்டு கொண்டு செல்கிறது.

சுஷாந்த் வழக்கில் 30க்கும் மேற்பட்டோர் விசாரித்தும் சித்ரா வழக்கில் 15க்கும் மேற்பட்டோர் விசாரித்து நாளுக்கு நாள் இன்னும் வழக்கை நீட்டித்து வருகிறது.

இந்நிலையில், சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், சில நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்திருந்த புகார் மனுவில், சித்ராவிற்கு குடிப்பழக்கம் உண்டு என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறிருக்க, தற்போது சித்ராவின் கைப்பையிலிருந்து கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கிலும் இதுபோன்ற போதைபொருள் பழக்க வழக்கம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

நடிகை சித்ராவின் ஹேண்ட் பேக்கை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் அதை சிகரெட்டில் லோடு செய்யும் கருவியையும் கண்டெடுத்தனர்.

இதனால் சித்ராவுக்கு குடிப்பழக்கத்துடன் சேர்ந்து கஞ்சா பழக்கமும் இருப்பதாக தெரிகிறது.

தற்போது சித்ராவின் தற்கொலை வழக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு திசை மாறியுள்ளது. இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.