
சினிமாவில் நடிகைகளுக்கென்று பல ரசிகர்கள் பட்டாளம் குவிந்து கிடப்பார்கள். அந்தவகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே.
கோடிகளில் சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக வளம் வரும் தீபிகா சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்த முன்னணி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து சினிமாவில் மார்க்கெட் குறையாமல் நடித்தும் வருகிறார்.
தற்போது படங்கள் வெளியாகாமல் திரைப்படங்களில் நடித்து வரும் தீபிகா தன்னுடைய பிறந்தநாளை இன்று ஜனவரி 5ல் கொண்டாடி வருகிறார். நேற்றிரவு அவரை நேரில் பார்த்து சில பிரபலங்கள் வாழ்த்து கூறி வந்தும் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்றிரவு அவர் இரவு பார்ட்டி கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகைகளான ஆலியா பட் அவரின் தங்கை ஷாஹீன் பட் உள்ளிட்ட இளம்பெண்களுடன் பார்ட்டி கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.