ஓட்டலில் ஆண் நண்பருடன் போதைபொருளுடன் சிக்கிய 27 வயதான இளம்நடிகை! பின்னணியில் இருப்பது யார்?

Report
39Shares

சமீபகாலமான பிரபலங்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதும் கையும் களவுமாக பிடிப்பட்டதும் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. அந்தவகையில் பாலிவுட் பக்கம் மட்டும் இந்த பிரச்சனை இருந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பியுள்ளது.

சுஷாந்த் வழக்கில் பாலிவுட் நடிகைகள் பலரிடன் போதைபொருட்கள் பறிமுதல் செய்ததை அடுத்து பல இடங்களில் போலிசாரால் சோதனை செய்யப்பட்டது. அதில் மும்பையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் ஸ்வேதா குமாரி என்ற பெண்ணிடம் கஞ்சா பொருட்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

அப்பெண்ணிடம் விசாரித்ததில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த 27 வயதான இளம் நடிகை என்று கூறியுள்ளார். அந்த ஓட்டலில் ஆண் நண்பர்களும் இருந்தார் என்று கூறப்படுகிறது. கஞ்சா கொடுத்தது யார் என்று போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தென்னிந்திய நடிகை போதை பொருள் விவகாரத்தில் கைது செய்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.