25 வயதான பிரபல நடிகையின் வீட்டிற்குள் குதித்த இளைஞர்! இந்த நடிகரின் மகளா!

Report
9Shares

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் அதிகரிக்கும் நிலையில் பிரபலமானவர் நடிகை ஹஹானா கிருஷ்ணன். கேரளா முழுவந்தும் லாக்டவுனை கவனத்துடன் பார்த்து வரும் நிலையில் கொரானா வைரஸிற்கு பயந்து வீட்டிலே முடங்கி இருக்கிறார்.

இவர் மனிதன், சத்யம், தெய்வத்திருமகன் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த கிருஷ்ணகுமாரின் மகள்.

இந்நிலையின் நேற்றிரவு திருவன்ந்தபுரத்தில் இருக்கும் சாஸ்தாமங்கலம் வீட்டில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார். வீட்டிற்குள் நுழைய முற்பட்ட இளைஞரை பார்த்து நடிகையின் தந்தை கிருஷ்ணகுமார் அதிர்ச்சியடைந்தார்.

இது பற்றி வட்டிகாவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் பெயர் பசில் அல்அக்பர் என்றும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி, நடிகர் கிருஷ்ண குமார் கூறுகையில், அந்த வாலிபர் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் குடும்பத்தினர் வாலிபரை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதுபற்றி நடிகை ஹஹானா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதை பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.