எங்கள் தாய்மைக்கு விலை நிர்ணயம் செய்ய நீ யார்? கமலுக்கு சப்போர்ட் செய்த பிரபலம்.. அசிங்கப்படுத்திய நடிகை

Report
411Shares

தமிழ் திரையுலகில் உலக நாயகனாக திகழ்ந்து தற்போது அரசியலுக்கு நுழைந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தவர் நடிகர் கமல் ஹாசன். பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்கு தகுந்த சம்பளம் அளிக்க வேண்டும் என்ரு பேசி சர்ச்சையாக பேசியுள்ளார்.

இதற்கு அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் ஆதரவு அளித்து, கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். கமல்ஹாசனின் கருத்தை பாராட்டி சஷி தரூர் Tweet பக்கத்தில் பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்து கடும்கோபத்தில் பதில் டிவிட் போட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அவர் கூறியது, குடும்ப தலைவி, இல்லத்தரசிகளான நாங்கக் எங்கள் அன்புக்குரியவரோடு கொள்ளும் உடலுறவுக்கு விலையோ, ஊதியமே வைக்காதீர்கள், அதை பற்றி சொல்லாதீர்கள்.

எங்கள் தாய்மைக்கு விலை நிர்ணயம் செய்ய நீங்கள் யார்..? எங்களுக்கு சம்பளம் தேவையில்லை. அனைத்தையும் வியாபாரமாக பார்ப்பதை நிறுத்துங்கள். உங்களுக்கான பெண்ணிடம் சரணடையுங்கள். உங்களை முழுமையாக அவள் எதிர்பார்க்கிறாள்” என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பேசியது இந்திய அரசியலையும், சினிமாவட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது.