பிரபல நடிகரின் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றும் கும்பல்! அதிர்ச்சியில் விஜய்..

Report
8Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் விஜயகுமார். அவருக்கு அடுத்த தன் பிள்ளைகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதில் தற்போது முன்னணி நடிகராக வார்சு நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அருண் விஜய்.

ஆரம்பத்தில் அவர் படம் பெரிய வரவேற்பை பெறாமல் இருந்தாலும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து தான் வந்தனர். இதையடுத்து நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்து பெரிய இடத்தினை பிடித்தார்.

இதையடுத்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்று நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் பெயரை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றுகிறார்கள் என் பெயரின் பல விளம்பரங்கள் போலியாக இருக்கிறது என்று புகாரளித்துள்ளார்.

அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்றுக்கு நடிக்க ஆர்வம் உள்ள இளம் பெண்கள் தேவை என்ற பொய் விளம்பரம் ஒன்று எப்படியோ அருண்விஜய் கண்ணில் பட்டுவிட்டது.

இதனால் பதறிப்போன அருண் விஜய் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்ற பொய்யான அறிவிப்புகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள் என அதிகாரப்பூர்வமாக தன்னுடைய பக்கத்தில் அறிவித்துள்ளார்.