
சினிமாவில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள ஏதாவது மீடியா முன்போ பேட்டியிலோ பேசி சர்ச்சையை ஏற்படுத்திவார்கள். அந்தவகையில் சமுகவலைத்தளத்தில் கருத்துகளை கூறுவதை போல் பரபரப்பான ஒன்றை கூறி சர்ச்சையில் மாட்டிக்கொள்ளவும் செய்வார்கள்.
அப்படி தன்னுடை படங்களின் நடிகைகளை மோசமான ஆடையணிந்து நடிக்கவைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. நடிகர் சூர்யாவை வைத்து ரக்ஷ சரித்திரம் படத்தினை இயக்கியதை அடுத்து தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி அதன்பின் சர்ச்சை படங்களையும் இணையத்தில் சர்ச்சை புகைப்படங்களை கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிவார்.
இந்நிலையில் தன் படத்தின் நடிகைகளை எப்படி தேர்வு செய்கிறேன் என்பதை சர்ச்சையாக பேசி இந்தியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு பெண்களின் உடல் மட்டும்தான் வேண்டும் எனவும், அவர்களின் மூளை வேண்டாம் எனவும் ராம்கோபால் வர்மா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெண்களை ஆபாசமாக பார்க்கும் அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர்களை வம்புக்கு இழுத்து கொண்டிருந்த ராம் கோபால் வர்மாவின் பார்வை தற்போது நடிகைகளின் மீது சென்று சினிமா வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.