ரம்பாவை மறைத்து வேறொரு நடிகையை ஆடவைத்த இயக்குநர்.. விஜய் படத்தில் ஏற்பட்ட ரகசியம்

Report
592Shares

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருபவர் நடிகை விஜய். தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வரும் பொங்கல் அன்று 13ம் தேதி தியேட்டரில் 100 சதவீத இருக்கையுடன் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது டிவிஸ்ட் இருக்கும். அந்தவகையில் விஜய்யின் நினைத்தேன் வந்தாய் படத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாம். அதாவது அப்படத்தினை இயக்குநர் கே. செல்வ பாரதி இயக்கி இருந்தார்.

முதலில் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்தி தான் நடிக்க இருந்ததாம். கால்ஷீட் காரணமாக கார்த்தி நடிக்காமல் போக எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டு வழியாக சென்ற செல்வ பாரதி அவரிடன் மகன் விஜய்யை நடிக்க கூற கேட்டுள்ளார். அப்படி கதையை கேட்டு நடிக்க ஆரம்பித்தார் விஜய்.

மேலும் அப்படத்தின் இரண்டாம் நாயகியாக நடிகை சிம்ரன் தான் நடிக்க கமிட்டாகினாராம். அதுவும் கால்ஷீட் காரணமாக சிம்ரன் விலகி நடிகை ரம்பாவை புக் செய்து நடிக்க வைத்துள்ளனர்.

இதையடுத்து வண்ண நிலவே பாடலுக்கு விஜய்யை ஒவ்வொரு நாளும் வேறு வேறு சட்டைகளை அணிய வரவழைத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். ஆனால் எடிடிங்கில் நன்றாக இருந்தது என்று விஜய் பாரட்டினாராம்.

இது ஒரு பக்கம் இருக்க ஆரம்பத்தில் வண்ண நிலவே பாடலில் ரம்யா முகத்தினை மூடி மரத்தின் மேல் இடுப்பை ஆட்டி ஆடியிருப்பார். அக்காட்சி உள்பட மொத்தம் 48 ஷாட்கள் வேறொரு நடிகையை வைத்து ஆட வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

இதற்கு காரணம், அப்பாடல் எடுக்கும் போது ரம்பா தெலுங்கு சினிமாவின் நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க சென்றதால் அக்காட்சியை நடிகையின் முகம் தெரியாமல் எடுத்தோம் என்று இயக்குநர் கே. செல்வ பாரதி கூறியிருந்தார்.