
தற்போதைய சினிமா வட்டாரத்தில் தன்னுடைய மார்க்கெட் இழந்த பிரபலங்கள் தங்களுக்கு அடுத்ததாக அவரிகளின் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தும் கலாச்சாரன் உருவாகி வருகிறது.
அந்தவகையில் தமிழ்சினிமாவின் முன்னணி மற்றும் உலக நாயகனாக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன். சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய இரு மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலமாகி வருகிறார்.
அதில் மூத்த மகள் சுருதிஹாசன் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி பல முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடி போட்டு நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியால் கஷடப்பட்டு வந்த சுருதிஹாசன் படவாய்ப்புகள் இல்லாமல் விட்டிலேயே முடங்கி இருந்து வந்தார்.
சமீபத்தில் தெலுங்கு முன்னணி நடிகர், ரவி தேஜாவுடன் நடித்த கிராக் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஒப்பந்தமான படமான லாபம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கொரானா கட்டுப்பாடுகள் இருக்கும் காலத்தில் எப்போது ரசிகர்களை பார்த்து கட்டிபிடித்து ஆரத்தழுவும் விஜய் சேதுபதி இப்படி செய்வதால் தான் அவர் அப்படப்பிடிப்பிற்கு வர மாட்டேன் என்று கூறப்பட்டது.
இதை உறுதிப்படுத்தியும் சமூக வலைதளப் பக்கத்தில் ஏன் அப்படி சென்றேன் என்ற காரணத்தையும் தெரிவித்துவிட்டார். ஆனால் தற்போது ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியுடன் நடிக்க மாட்டேன் என உறுதியாக தெரிவித்து விட்டாராம்.
மேலும் படத்தின் இயக்குனரான எஸ் பி ஜனநாதன் சென்னையில் செட் போட்டு படத்தை எடுக்கலாம் எனவும் தற்போது கொரானா பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு இல்லை எனவும் சுதிகாசன் இடம் ஒரு நாள் கால்சீட் கேட்டு கெஞ்சி கொண்டிருக்கிறாராம். இருந்தாலும் அம்மணி இறங்கி வந்த பாடில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.