ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மாதவன்பட நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
216Shares

சினிமாவில் யாருக்கு எப்படி படவாய்ப்புகள் அமையும் என்று கூறமுடியாது. அந்த அளவிற்கு பிரபலங்களுக்கு மார்க்கெட் குறையாமல் இருக்க வேண்டும். அந்தவகையில், ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமானவர்களை விட அதற்கு பிறகு காணாமல் போனவர்கள் தான் அதிகம்.

அப்படிஜேஜே’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக தோன்றி பிரபலமானவர் நடிகை பிரியங்கா கோத்தாரி. நடிகர் மாதவனுக்கு ஜோடியாக க்யூட்டான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார் பிரியங்கா. இதையடுத்து 7 வருடம் கழித்து, கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் கிளாமராக நடனம் ஆடி இருந்தார்.

அதற்குப் பிறகு இவர் கோலிவுட்டில் எந்த ஒரு திரைப்படத்திலும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 37 வயதாகிறது. மேலும் 2 படங்களில் தோன்றியதற்கு பின் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

சினிமாவிற்கு வந்த புதிதில் உடல் எடையை ஃபிட்டாக வைத்து கட்டான உடலமைப்பை கொண்டிருந்தார். ஆனால், தற்போது வெளிநாட்டு வெள்ளை பூனைபோல் புசுபுசுவென மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.