9 கோடியை மோசடி செய்த ஜோதிடர்? கூட்டுச்சேர்ந்து பெண் நீதிபதியை ஏமாற்றிய பிரபல நடிகை..

Report
11Shares

மனிதர்களின் இயல்பாக இருப்பது ஆசை. அதிலும் பேராசை ஏற்பட்டால் யாரையும் சந்தேகப்படாமல் நம்பிக்கை வைத்திவிடும். அந்தவகையில் கேரள மாநில பெண் நீதிபதி ஒருவருக்கு ஜோதிடர் ஒருவர் முன்னாள் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமியின் முன்னாள் இரண்டாம் மனைவி குட்டி ராதிகாவுடன் சேர்ந்து 9 கோடி அளவில் ஏமாற்றியுள்ளது கர்நாடக மாநிலத்தையே தற்போது அதிரவைத்துள்ளது.

ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஒருவர், யுவராஜ் என்கின்ற புகழ்பெற்ற ஜோதிட ஆசாமியிடம் சிக்கிக்கொண்டு ரூ. 8.80 கோடியை பறிகொடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஓய்வு பெற்ற அந்தப் பெண் நீதிபதிக்கு, கர்நாடகாவில் ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக ஜோதிட ஆசாமி ஆசை காட்டி உள்ளார். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியும், பிரபல நடிகையுமான குட்டி ராதிகாவிற்கும், இந்த மோசடி மன்னன் யுவராஜ் ஜோதிடருக்கும் நட்பு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எனவே இதுகுறித்து குட்டி ராதிகாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சினிமா படத்தில் நடிப்பதற்காக, யுவராஜ் ஜோதிடரிடம் இருந்து ரூ. 75 லட்சம் சம்பளமாக பெற்றதாக விளக்கமளித்தார்.

இதுகுறித்து யுவராஜ், குட்டி ராதிகாவின் குடும்பத்திற்கு சுமார் 17 வருடங்களாக குடும்ப ஜோதிடராக இருப்பதால், எதிர்காலம் குறித்து அவர் கூறிய ஜோசியம் பலித்ததாலே, யுவராஜ் மீது தங்கள் குடும்பத்திற்கு தனி மரியாதை இருப்பதாகவும் விவரித்தார் குட்டி ராதிகா.

எனவே யுவராஜ், குட்டி ராதிகாவிடம் புதிய படம் ஒன்றை எடுக்க விரும்பியதாகவும் அந்த படத்திற்கு ‘நாட்டிய ராணி சாந்தலா’ என்ற பெயரும் அவர்கள் பேசி முடித்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியாக குமாரசாமி குட்டி ராதிகாவா யார்? என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன் குட்டி ராதிகாவும் குமாரசாமியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.