10 வயது இளம்நடிகருடன் திருமணம்! உறவு பற்றி வெளிப்படையாக கூறிய 38 வயதான பிரபல நடிகை

Report
1215Shares

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தார். ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக இருந்து பாலிவுட் முன்னணி நடிகையான பின் க்ளாமரில் எல்லைமீறி நடித்தார்.

தற்போது வரை பாலிவுட்டில் மார்க்கெட்டை குறைக்காமல் இருந்து படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னைவிட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நி ஜோனஸை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்து பல சர்ச்சைகளையும் கண்டுகொள்ளாமல் ஜோடிபறவைகளாக நாடுவிட்டு நாடு சென்று வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் தி சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வயது வேறுபாடுகள் எங்கள் உறவில் தடையாக இருந்ததில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

எனக்கு 38, நிக்கிற்கு 28 வயதாகியுள்ளது. 10 வயது வித்யாசம் எங்கள் வாழ்க்கை உறவில் தடையாக இல்லை என்றும், நிக் தண்ணீருக்குள் இருக்கும் மீன், இந்திய கலாச்சாரத்தை பிடித்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.