பிக்பாஸ் 4ன் வின்னர் 70% வாக்கு பெற்றது இந்த ஆண் போட்டியாளரா? வைரலாகும் அட்டவனை விவரம்!

Report
312Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரட்சயமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாகி வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு கொரானா லாக்டவுனிற்கு பிறகு ஆரம்பித்த பிக்பாஸ் 4 சீசன் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. வரும் ஜனவரி 17ஆம் தேதி யார் வெற்றியாளர் என்று தெரியப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் போட்டியில் யார் அதிக வாக்குகள் பெற்று வருகிறார் என்ற அட்டவனை இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அப்படி வரும் வாக்குகளின் அட்டவணையில் நடிகர் ஆரி மட்டும் மக்களிடம் இருந்து, 70 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

ஏனைய 30 சதவீத வாக்குகளை மற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும் அதிக வாக்குகள் நடிகர் ஆரிக்கு கிடைத்துள்ளதால், இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகுவதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக இரண்டாவது இடத்தில் இருக்கும் பாலாஜிக்கும், முதலிடத்தில் இருக்கும் ஆரிக்கும் அதிக வேறுபாடு நிலவி வருகிறது. மேலும் மூன்றாவது இடம் ரம்யாவிற்கும், நான்காவது இடம் ரியோவிற்கும்,

ஐந்தாவது இடம் சோம் சேகருக்கும், கடைசி இடம் கேப்ரில்லாவிற்கும் மக்கள் அளித்துள்ள ஓட்டின் அடிப்படையில் கிடைத்துள்ளது. எனவே பிக் பாஸ் சீசன்4 டைட்டில் வின்னர் யார் என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமை பொறுத்திருந்து பார்ப்போம்.