மாஸ்டர் படத்தின் ஜிஃப் வீடியோவை லீக் செய்த நடிகை நிக்கி கல்ராணி.. கடும்கோபத்தில் ரசிகர்கள்..

Report
88Shares

கடந்த ஒரு வருடங்களாக அனைத்து தமிழ் சினிமா வட்டாரமும் ரசிகர்களும் ஆவளுடன் எதிர்ப்பார்த்து இருப்பது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் என்பதுதான். அதற்கு ஏற்ப மாஸ்டர் படத்தினை ஜனவரி மாதம் 13 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இன்று படம் வெளியாகியது.

தளபதி ரசிகர்கள் ஆவளுடன் படத்தினை காலை முதல் கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தினையும் பெற்று வருகிறது மாஸ்டர் படம்.

இந்நிலையில், படத்தினை இணையத்தில் வெளியிட கூடாது என்று படக்குழுவும், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகள் கேட்டு கொண்டு வந்தனர். ஆனால் இதை கண்டுகொள்ளாத சிலர் படத்தின் சிறு காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறது.

இதையடுத்து படத்தினை பார்த்த மகிழ்ச்சியில் பிரபல நடிகை நிக்கி கல்ராணி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் காட்சி ஒன்றை ஜிஃப் வீடியோ மூலம் பகிர்ந்து ஒரு வருடம் காத்திருந்து பார்த்துவிட்டேன் என்று பதிவினை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்து சில இணையவாசிகள் நடிகை நிக்கி கல்ராணியின் மீது கோபத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். பிரபலங்களான நீங்களே இப்படி வீடியோவை பகிரலாமா என்று கருத்துகளை கூறி சாடி வருகிறார்கள்.