மறைந்த சித்ராவின் கடைசி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை.. வைரலாகும் புகைப்படம்.

Report
54Shares

கடந்த ஆண்டு இறுதி மாதத்தில் சின்னத்திரைக்கு பெரும் அதிர்ச்சியளித்த ஒன்று விஜே சித்ராவின் தற்கொலை சம்பவம். பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸின் முல்லை கதாபாத்திரம் மூலம் அனைவரை கவர்ந்து எதிர்ப்பார்க்க முடியாத படி அவரின் மறைவு அதிர்ச்சியை கொடுத்தது.

அவரின் மறக்கமுடியாத அனுபவங்கள் பல பிரபலங்கள் பகிர்ந்து கொண்டு வரும் நிலையில் சீரியல் நடிகையான சரண்யா கடைசி காலத்தில் சித்ரா கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக். அப்படி கலந்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு வருத்தப்பட்டுள்ளார்.

அதில், ‘மறக்கமுடியாத நிகழ்ச்சி. இது உங்கள் கடைசி புகைப்படம் என்பதால் இது பற்றி மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். உங்களுடைய லட்சக் கணக்கான ஃபாலோவர்களைப் போலவே மீண்டும் ஒரு முறை திரையில் பார்க்க நான் காத்திருக்கிறேன். இறுதியாக இன்று ஒளிபரப்பானது. “நாங்கள் ஒன்றாக எடுத்த செல்ஃபிகள் உங்கள் தொலைபேசியில் உள்ளது.

மேலும் உங்கள் மனதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நினைவுகள். கனமான இதயத்துடன் உங்களிடம் விடைபெறுகிறது. இது நம்முடைய கடைசி புகைப்படமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அதை மறக்க முடியாததாக ஆக்கியுள்ளீர்கள். உங்கள் இந்த புன்னகை முகம் எங்கள் நினைவுகளில் உறைந்திருக்கிறது விஜே சித்ரா.” என்று குறிப்பிட்டுள்ளார்.